இந்த வழிகாட்டி உங்களது புரவலர் உறவு மேலாளரில் இருந்து தனிப் புரவலர்களுக்கும் பல புரவலர்களுக்கும் செய்தி அனுப்புவதை உள்ளடக்கும். நீங்கள் ஒரு விரைவான வரவேற்பை அனுப்புவதாகவோ, அனைத்து புரவலர்களுக்கும் ஒரு அடுக்கில் நன்மைகளை வழங்குவதாகவோ, உங்கள் உறுப்பினருரிமைகளுக்கு முக்கியமான புதுப்பிப்புகளைத் தொடர்பாடுவதாகவோ என எதுவாக இருந்தாலும், இது உங்கள் ஆதரவாளர்களுக்கு எவ்வாறு நேரடியாகச் செய்திகளை அனுப்புவது என்பதைக் காட்டும்.
கீழேயுள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி முன்னோக்கித் தவிர்த்துச் செல்ல, அல்லது தொடக்கத்திலிருந்தே ஆழ்ந்துப் படிக்கத் தயங்க வேண்டாம்!
- ஒரு தனிப்பட்ட புரவலருக்குச் செய்தி அனுப்புங்கள்
- ஒரே நேரத்தில் பல புரவலர்களுக்குச் செய்தி அனுப்புங்கள்
- அனுப்பிய செய்திகளை நிர்வகித்தல்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நீங்கள் ஒரு புரவலராக இருந்தால், உங்களது கணக்கிலிருந்து ஒரு படைப்பாளருக்குச் செய்தியனுப்புவது எவ்வாறு என்பதைப் பற்றிய இந்த வழிகாட்டியை வாசியுங்கள்.
ஒரு தனிப்பட்ட புரவலருக்குச் செய்தி அனுப்புங்கள்
புரவலர் உறவுகள் மேலாளர்
நீங்கள் உங்களது புரவலர் உறவு மேலாளர் என்பதிலிருந்தே தனியாள் அல்லது குழுச் செய்திகளை அனுப்பலாம். இந்த பிரிவில், இந்த கருவியில் இருந்து ஒரு தனிப்பட்ட புரவலருக்குச் செய்தி அனுப்புவதைப் பற்றி நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம்.
- உங்களது Patreon கணக்கில் உள் நுழைந்திருக்கும் போது, உங்களது புரவலர் உறவு மேலாளருக்குச் செல்லுங்கள். இக்கருவி உங்களது இடது வழிச்செலுத்தற் பலகையின் “புரவலர்கள்” என்னும் பிரிவில் அமைந்துள்ளது.
- நீங்கள் உங்களது உறவு மேலாளரின் தேடற்பட்டியில் புரவலரின் பெயரைத் தெரிவு செய்யலாம், அது இயல்பிருப்பாக உங்களது செயல் நிலையிலுள்ள புரவலர் பட்டியலினூடாகத் தேடும். ஒரு முன்னாள் அல்லது குறைந்து வரும் புரவலருக்குச் செய்தியனுப்ப “உறுப்பினருரிமை வகையின்” மூலம் வடிகட்டுங்கள். நீங்கள் புரவலரைக் கண்டு கொள்ளும் வரை, நீங்கள் (செயல் நிலையிலுள்ள, குறைந்து வரும், முன்னாள்) உறுப்பினருரிமை வகையின், அடுக்கு மட்டத்தின், அல்லது குறிப்பான விலைப்பட்டியலிடல் மாதத்தின் மூலமும் வடிகட்டலாம்.
- புரவலரின் பெயரின் இடதுபுறத்தில் உள்ள பெட்டியை சரிபார்த்து “செய்தி” இணைப்பைச் சொடுக்குக. நீங்கள் பக்கத்தின் வலப்புறம் அவரது புரவலர் தகவல்களை வெளிப்படுத்த புரவலரின் பெயரைச் சொடுக்கவும் செய்யலாம். நீங்கள் அந்தத் தனிப்பட்ட புரவலருக்குச் “செய்தியனுப்பல்” பொத்தானையும் கண்டு கொள்வீர்கள்.
- உரைப் புலத்தில் உங்களது செய்தியை உருவாக்கி, பின்னர் “அனுப்பு” என்பதைச் சொடுக்குங்கள். இது அந்தத் தனிப்பட்ட புரவலருடன் ஒரு புதிய செய்தி இழையைத் தொடங்கும்.
புரவலர்களுக்கு அவர்களின் சுயவிவரத்திலிருந்து செய்தி அனுப்புதல்
நீங்கள் அவர்களின் புரவலர் சுயவிவரப் பக்கத்துக்குச் செல்வதன் மூலமும் தற்போதைய புரவலர்களுக்கும் முன்னாள் புரவலர்களுக்கும் செய்தியனுப்பலாம்.
- புரவலரின் சுயவிவரப் பக்கத்துக்குச் செல்க.
- “செய்தி” இணைப்பைச் சொடுக்குக.
- உரைப் பெட்டிப் புலத்தில் உங்களது செய்தியைத் தட்டச்சிட்டு, அனுப்புக என்பதைச் சொடுக்குக. அவ்வளவு தான்!
பல புரவலர்களுக்குச் செய்தி அனுப்புதல்
நீங்கள் பல புரவலர்களுக்கு ஒரு மொத்தச் செய்தியை அனுப்ப அல்லது ஒரு குறிப்பான அடுக்கில் செயல் நிலையிலுள்ள எல்லாப் புரவலர்களுக்கும் நலன்களை வழங்கத் தேடுகிறீர்களானால், நீங்கள் அவை யாவையும் உங்களது புரவலர் உறவு மேலாளர் என்பதிலிருந்து செய்யலாம்!
எப்படி என்பது இதோ:
- உங்களது Patreon கணக்கில் உள் நுழைந்திருக்கும் போது, உங்களது புரவலர் உறவு மேலாளருக்குச் செல்லுங்கள். இக்கருவி உங்களது இடது வழிச்செலுத்தற் பலகையின் “புரவலர்கள்” என்னும் பிரிவில் அமைந்துள்ளது.
- நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் புரவலர்களின் பட்டியலை உருவாக்க உங்கள் மேலாளரின் மேலே உள்ள வடிகட்டிகளைப் பயன்படுத்துங்கள். படைப்பாளர்கள் தங்கள் பட்டியலை வடிகட்டக்கூடிய சில பொதுவான வழிகள் இதோ:
- உறுப்பினருரிமை நிலை: செயல் நிலை + அடுக்கு மட்டம். இது பணம் செலுத்தியுள்ளதுடன் ஒரு குறிப்பிட்ட அடுக்கிலுள்ள எல்லாப் புரவலர்களுக்கும் செய்தியனுப்ப உங்களுக்கு வழி செய்கிறது. இது செய்திகளின் மூலம் அடுக்குக்குக் குறிப்பான நன்மைகளை வழங்கச் சிறந்தது!
- உறுப்பினருரிமை நிலை: நிராகரிக்கப்பட்டவை + குறிப்பான விலைப்பட்டியலிடல் மாதம். எந்தவொரு விலைப்பட்டியலிடல் மாதத்திலுமிருந்து நிராகரிக்கப்பட்ட எல்லாப் புரவலர்களுக்கும் அவர்கள் தற்போது குறைந்து வருவதை அவர்களுக்குத் தெரிவிக்க இது உங்களுக்கு வழி செய்கிறது.
- உறுப்பினருரிமை நிலை: பணத்தைத் திருப்பிக் கொடுத்தவை + குறிப்பான விலைப்பட்டியலிடல் மாதம். இது நீங்கள் புரவலர்களுக்குப் பணத்தைத் திருப்பியளித்திருப்பதை உறுதிப்படுத்த, நீங்கள் பணத்தைத் திருப்பியளித்திருக்கக்கூடிய புரவலர்களுக்குச் செய்தியனுப்ப உங்களை அனுமதிக்கிறது.
பெற்ற மற்றும் அனுப்பிய செய்திகளை நிர்வகித்தல்
உங்கள் செய்தி உரையாடல்களை உங்கள் Patreon கணக்கு அகப்பெட்டியில் காணலாம் மற்றும் நிர்வகிக்கலாம். இது நீங்கள் செய்திகளை அனுப்பிய புரவலர்களிடமிருந்தோ அல்லது உங்களை நேரடியாக அணுகிய புரவலர்களிடமிருந்தோ வரும் பதில்களைக் காணுமிடமாகும். இடதுபுற menu விலிருந்து செய்தி இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் உங்கள் அகப்பெட்டியைக் காணலாம்.
உங்கள் அகப்பெட்டி இரண்டு வெவ்வேறு தாவல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: உங்கள் படைப்பாளர் அகப்பெட்டி மற்றும் உங்கள் புரவலர் அகப்பெட்டி (நீங்கள் மற்ற படைப்பாளர்களுக்கு ஒரு புரவலராக இருந்தால்).
- இடதுபுற மூலையில் உள்ள தாவல் உங்கள் படைப்பாளர் அகப்பெட்டியாகும், அங்கு உங்களுக்கும் உங்கள் புரவலர்களுக்கும் இடையில் அனுப்பப்பட்ட செய்திகளைக் காணலாம்.
- இரண்டாவது தாவல் உங்கள் புரவலர் அகப்பெட்டியாகும், அங்கு நீங்கள் ஒரு புரவலராக அனுப்பிய செய்திகளை அல்லது நீங்கள் ஆதரிக்கும் படைப்பாளர் உங்களுக்கு அனுப்பியுள்ள செய்திகளைக் காணலாம்.
உங்கள் உரையாடலை வெளியிலெடுக்க இடது பேனலில் இருக்கும் செய்தி முன்னோட்டத்தைச் சொடுக்கவும். பதிலளிப்பதற்கு, உரைப் புலப் பெட்டியில் சொடுக்கி, உங்கள் பதிலைத் தட்டச்சு செய்து, “அனுப்புக” என்பதைச் சொடுக்கவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
செய்தி அனுப்புதல் சேவை வழியாக நான் படங்களை அனுப்பலாமா?
இப்போதைக்கு, தனிப்பட்ட செய்திகளில் படங்களைப் பகிர முடியாது. நீங்கள் பயனர்களுடன் இணைப்புகளைப் பகிரலாம், இது படத் தொகுப்புகளைப் புரவலர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு விருப்பமாகும்.
என்னால் ஒரு செய்தியை நீக்க முடியுமா?
இந்த நேரத்தில் உங்கள் உரையாடல்களில் இருந்து செய்திகளை நீக்க முடியாது.
என்னால் மொத்தச் செய்திகளை அனுப்ப முடியுமா?
நிச்சயமாக! நீங்கள் ஒரு குறிப்பிட்ட அடுக்கில் உள்ள, பலவிதமான பணத்தைச் செலுத்தும் புரவலர்கள் அல்லது மறுக்கப்பட்ட புரவலர்கள் அனைவருக்கும் செய்திகளை அனுப்பலாம். எவ்வாறு மொத்தச் செய்தியை அனுப்புவது என்பதைப் பற்றி அறிய இந்தப் பிரிவைப் படியுங்கள்.
என்னை பின்தொடர்பவர்களுக்கு நான் செய்தி அனுப்ப முடியுமா?
நீங்கள் நிதி சார்ந்த உறவை வைத்திருக்கின்ற அல்லது வைத்திருந்த (முன்னாள் புரவலர்) புரவலர்களுக்கு மட்டுமே நீங்கள் செய்தி அனுப்ப முடியும். எனவே உங்களைப் பின்தொடரும் புரவலர்களுக்கு நீங்கள் செய்திகளை அனுப்ப முடியாது. நீங்கள் ஏதேனும் புதுப்பிப்புகளுடன் அல்லது உங்கள் உறுப்பினருரிமையில் சேர்வதற்கான அழைப்புகள் மூலம் உங்களைப் பின்தொடர்பவர்களைத் தொடர்புகொள்ள விரும்பினால், பின்தொடர்பவர்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர பொது இடுகையை வெளியிடுமாறு பரிந்துரைக்கிறோம்.
பல உரையாடல்களை ஒரு உரையாடல் கோர்வையில் இணைக்க முடியுமா/ஒரே புரவலருக்கு நான் அனுப்பிய அனைத்துச் செய்திகளையும் கண்டறிய முடியுமா?
இப்போதைக்கு, உரையாடல்களை ஒன்றிணைக்க எந்த வழியும் இல்லை.
மொத்தச் செய்தியை அனுப்ப எனது பட்டியலிலிருந்து குறிப்பிட்ட புரவலர்களை என்னால் தேர்வுசெய்ய முடியுமா?
இப்போதைக்கு இல்லை. உங்கள் மொத்தச் செய்தியை ஒரு புரவலர்கள் குழுவுக்கு அனுப்ப உங்கள் புரவலர் பட்டியலை நீங்கள் வடிகட்டலாம் (எ.கா., ஒரு குறிப்பிட்ட அடுக்கில் இருக்கும் மறுக்கப்பட்டவர்கள், பணம் செலுத்தியவர்கள்). அதன் பின்னர், வடிகட்டப்பட்ட பட்டியலில் தோன்றும் அனைவருக்கும் நீங்கள் செய்தி அனுப்பலாம். தனிப்பட்ட புரவலர்களுக்குச் செய்தி அனுப்ப, உங்கள் புரவலர் பட்டியலில் உள்ள அவர்களின் பெயரைச் சொடுக்கி, அவர்களின் வலதுபுறப் புரவலர் அட்டையில் உள்ள செய்தி பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்.