
Patreon-இல் உள்ள ஒரு படைப்பாளர் எவ்வாறு தனது உறுப்பினருரிமைக்காகத் தனிப்பயன் அடுக்குகளை அமைக்கலாம் என்பது குறித்து இந்தக் கட்டுரை தெரிவிக்கும். இதில் நன்மைகளைச் சேர்ப்பது, புரவலர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது, புரவலர்களுக்கு அனுப்புவதற்கான முகவரிகளைக் கேட்பது அல்லது ஒரு அடுக்குக்கு Discord பொறுப்புகளைச் சேர்ப்பது ஆகியவை அடங்கும்.
உங்கள் புரவலர்கள் தேர்வுசெய்ய நீங்கள் உருவாக்க விரும்பும் அடுக்குகளுக்கு உங்கள் உறுப்பினருரிமை விலைகளை அமைப்பது. புரவலர்கள் ஒரு அடுக்கில் இணையும்போது, உங்கள் அடுக்கின் விலையானது உங்கள் கட்டண அமைப்புகளைப் பொறுத்து உங்கள் புரவலர்களுக்கான மாதாந்திரக் கட்டணமாகவோ அல்லது ஒரு படைப்புக்கான கொடுப்பனவுத் தொகையாவோ இருக்கும்.
இந்த வழிகாட்டியில் என்ன அடங்கியிருக்கும்?
ஏற்கனவே உங்கள் அடுக்குகளையும் நன்மைகளையும் உருவாக்கிவிட்டீர்களா? உங்கள் நன்மைகளை நிர்வகிப்பது குறித்து மேலும் படிக்கவும்.
ஒரு அடுக்கை உருவாக்குதல்
உங்கள் Patreon படைப்பாளர் கணக்கில் உள்நுழைந்திருக்கும்போது, பின்வரும் படிகளை மேற்கொள்ளுங்கள்:
படி 1: மேல் பதாகையில் உள்ள உங்கள் பக்கத்தைத் திருத்துக என்ற பொத்தானை அழுத்தவும்.
படி 2: மெனுவில் இருந்து அடுக்குகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: ஒரு தனிப்பயன் அடுக்கை உருவாக்க, அடுக்கைச் சேர்க்கவும் என்ற பொத்தானை அழுத்தவும். இது உங்கள் முதல் அடுக்கு என்றால், தொடங்குவதற்கு எங்களின் முன்வடிவமைக்கப்பட்ட அடுக்குகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம்.
படி 4: உங்கள் அடுக்கைத் தனிப்பயனாக்குங்கள்! உங்கள் அடுக்கிற்குப் புரவலர்கள் எதிர்பார்க்கக்கூடிய விலை, தலைப்பு, நன்மைகள், விளக்கவுரை ஆகியவற்றை வழங்குங்கள்.
20 மே 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு உங்கள் படைப்பாளர் பக்கத்தை நீங்கள் தொடங்கியிருந்தால், உங்கள் நன்மைகள் உங்கள் அடுக்கு விளக்கவுரைக்குள் உள்ள பட்டியலில் தெரியும், அதனால் நீங்கள் அவற்றை இங்கே வகைப்படுத்த வேண்டியதில்லை.

உங்கள் அடுக்குக்கு நன்மைகளைச் சேர்த்தல்
ஒரு குறிப்பிட்ட அடுக்கைத் தேர்ந்தெடுத்ததற்குப் புரவலர்கள் பெறும் விஷயங்களே நன்மைகளாகும். அடுக்குகளுக்குப் பல நன்மைகளைச் சேர்க்கலாம் அல்லது வெகுசில, பெரிய-தாக்கத்தைக் கொண்ட நன்மைகளுடன் எளிமையானதாக வைக்கலாம்.
உங்கள் நன்மைகளானது வணிகப் பொருட்கள் (ஒட்டிகள், டி-ஷர்ட்டுகள் போன்றவை), அஞ்சல் அட்டைகள் அல்லது சேகரிக்கக்கூடிய பொருள் போன்ற பொருள் சார்ந்தவையாக இருக்கலாம். நன்மைகளானது நேரடி ஒளிப்பரப்பில் கலந்துகொள்ளுதல் அல்லது உங்களின் வரவிருக்கும் காணொளியின் நன்றி நவில்தல் பகுதியில் பெயர் குறிப்பிடுவது போன்று மின்னிலக்க ரீதியிலும் இருக்கலாம். ஒரு அறிவுக்கிளர்ச்சிப் பயிற்சியாக, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: எனது புரவலர்களுக்கு நான் தனித்துவமாக என்ன வழங்கலாம்?
உங்கள் நன்மைகளானது வணிகப் பொருட்கள் (ஒட்டிகள், டி-ஷர்ட்டுகள் போன்றவை), அஞ்சல் அட்டைகள் அல்லது சேகரிக்கக்கூடிய பொருள் போன்ற பொருள் சார்ந்தவையாக இருக்கலாம். நன்மைகளானது நேரடி ஒளிப்பரப்பில் கலந்துகொள்ளுதல் அல்லது உங்களின் வரவிருக்கும் காணொளியின் நன்றி நவில்தல் பகுதியில் பெயர் குறிப்பிடுவது போன்று மின்னிலக்க ரீதியிலும் இருக்கலாம். ஒரு அறிவுக்கிளர்ச்சிப் பயிற்சியாக, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: எனது புரவலர்களுக்கு நான் தனித்துவமாக என்ன வழங்கலாம்?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, 20 மே 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு உங்கள் படைப்பாளர் பக்கத்தை நீங்கள் தொடங்கியிருந்தால், இந்த நன்மைகள் உங்கள் அடுக்கு விளக்கவுரையில் ஒரு பட்டியலாகத் தெரியும். மேலும் அதிக படைப்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்கு நாங்கள் இந்த அம்சத்தை மேம்படுத்துவதில் பணியாற்றி வருகிறோம்.
உங்கள் அடுக்குகளுக்கு நன்மைகளைச் சேர்க்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:
படி 1: உங்கள் படைப்பாளர் பக்க ஆசிரியரின் அடுக்குகள் பிரிவுக்குச் சென்று, நீங்கள் நன்மைகளைச் சேர்க்க விரும்பும் அடுக்கைக் கண்டறியவும். அடுக்கைத் திருத்துக என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
படி 2: நன்மையைச் சேர்க்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும். ஏற்கனவே சேர்த்துள்ள நன்மைகளிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம், எங்களின் மிகவும் பிரபலமான நன்மைகளில் இருந்து தேர்வுசெய்ய "பரிந்துரைக்கப்பட்ட நன்மைகளைக் காண்க" என்பதைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது தனிப்பயன் நன்மை ஒன்றை உருவாக்கலாம்.
படி 3: நீங்கள் ஒரு தனிப்பயன் நன்மையை உருவாக்கத் தேர்வுசெய்தால், புலங்கள் அடங்கிய ஒரு படிவம் தோன்றும், அதில் நீங்கள் நன்மையின் தலைப்பு மற்றும் வகையை நிரப்பலாம். நீங்கள் தலைப்பு மற்றும் வகையைச் சேர்த்தவுடன், நன்மையைச் சேர்க்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.


படி 4: நீங்கள் மேலும் அதிக நன்மைகளைச் சேர்க்க விரும்பினால், இந்த அடுக்கில் நீங்கள் சேர்க்க விரும்பும் அனைத்து நன்மைகளையும் சேர்க்கும் வரை படிகள் 2 மற்றும் 3-ஐ மீண்டும் மேற்கொள்ளவும். ஏற்கனவே மற்ற அடுக்குகளின் ஒரு பகுதியாக இருக்கும் நன்மைகள் உங்களிடம் இருந்தால், நீங்கள் திருத்துகின்ற அடுக்கிலும் அவற்றைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வை நீங்கள் கண்டறியலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
படி 5: 20 மே 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கப்பட்ட படைப்பாளர்களுக்கு, உங்கள் அடுக்கு விளக்கவுரையில் பட்டியலிட விரும்பும் வகையில் உங்கள் நன்மைகளை மறுவரிசைப்படுத்த நீங்கள் இந்தப் படியை மேற்கொள்ளலாம். இதைச் செய்ய, நீங்கள் விரும்பும் வரிசையில் நன்மைகளை இழுத்து விடுங்கள்.
படி 6: அடுக்கைச் சேமிக்கவும் என்ற பொத்தானை சொடுக்க மறக்க வேண்டாம்!
உங்கள் அடுக்குகளிலிருந்து ஒரு நன்மையை அகற்ற வேண்டுமா? படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: அடுக்குகளிலிருந்து நன்மைகளை நீக்குதல்.
⚡️உதவிக்குறிப்பு: அந்த அடுக்கில் உள்ள புரவலர்களுக்கு உங்கள் கடைக்கான தள்ளுபடியாக ஒரு நன்மையை வழங்க ஒரு விளம்பரக் குறியீட்டைச் சேர்க்கவும்.
மேம்பட்ட அடுக்கு விருப்பத்தேர்வுகள்
மேம்பட்டவை பிரிவில் உள்ள அடுக்கு அமைப்புகள் விருப்பத்தேர்வானவை, மேலும் உங்களுக்கு எது சரியானது என்பதைக் கண்டறிய இந்த விருப்பத்தேர்வுகளைப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம். மேம்பட்ட அடுக்கு விருப்பத்தேர்வுகளைச் சரிபார்க்க, மேம்பட்டவை என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

எத்தனை புரவலர்கள் சேரலாம் என்ற எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும்
உங்கள் அடுக்குகளில் எத்தனை புரவலர்கள் சேரலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். புரவலர் வரம்பு தேர்வுப்பெட்டியைச் சொடுக்கி, உங்கள் அடுக்கில் அதிகபட்சமாக எத்தனை புரவலர்கள் சேரலாம் என்ற எண்ணிக்கையை உள்ளிடவும்.
நீங்கள் புரவலர்களுக்குப் பொருள்சார் நன்மைகளை அனுப்புகிறீர்களா? புரவலர்களின் அனுப்பல் முகவரியைச்சேகரித்தல்
எதிர்காலத்தில் பொருள்சார் நன்மைகளைச் சேர்க்கத் திட்டமிடுகிறீர்களா? உங்கள் புரவலர்களின் அனுப்பல் முகவரிகளை இப்போது கேளுங்கள். இந்தத் தேவையை உங்கள் அடுக்கில் பின்னர் சேர்க்கலாம். இருப்பினும், இந்தத் தகவல்களைச் சேர்க்க, தற்போதுள்ள புரவலர்கள் தங்கள் உறுதிமொழியைத் திருத்த வேண்டியிருக்கும்.
Discord -ஐச் சேர்க்கவும்
உங்கள் அடுக்கில் இணைப்பதற்கு முன்பு உங்களுக்கு ஒரு Discord கணக்கும் சேவையக அமைவும் தேவைப்படும். நீங்கள் அதைச் செய்தவுடன், Discord -இல் இணைந்து, தனிப்பட்ட அடுக்குகளிலிருந்து நேரடியாகப் பொறுப்புகளைச் சேர்க்கலாம்.
விற்பனை வரி
விற்பனை வரி
விற்பனை வரி அமைப்புகளானது விற்பனை வரியும், உலகெங்கிலும் உள்ள VAT, JCT, GST மற்றும் QST போன்ற அதையொத்த பிற வரிகளும் உங்கள் உறுப்பினருரிமைக்கு விதிக்கப்படும் விதத்தைக் கட்டுப்படுத்த உங்களை அனுமதிக்கின்றன. இந்த வரி அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் என்ன நன்மைகளை வழங்குகிறீர்கள் என்பதையும் விற்பனை வரி நோக்கங்களுக்காக அந்தப் பொருட்கள் எந்தளவுக்கு மதிப்பிடப்பட வேண்டும் என்பதையும் பற்றிய கூடுதல் விவரங்களை எங்களுக்குத் தருவீர்கள். இந்த வரி அமைப்புகளைப் பற்றி மேலும் அறிய, மேம்பட்ட விற்பனை வரி அமைப்புகளைப் பார்க்கவும்.
உங்கள் அடுக்கை வெளிடத்தயாராக இல்லையா?
நீங்கள் ஒரு அடுக்கில் பணிபுரிகிறீர்கள், ஆனால் அது நேரலைக்குத் தயாராக இல்லை என்றால், உங்கள் மாற்றங்களைச் சேமித்தவுடன் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதன் வெளியீட்டை நிறுத்தலாம். உங்கள் அடுக்கைச் சேமித்ததும், திருத்துக என்ற விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. கீழ் வரை உருட்டி, வெளியிட வேண்டாம் என்ற பொத்தானைச் சொடுக்கவும். உங்கள் அடுக்கு இன்னும் திருத்தக்கூடியதாகவே இருக்கும், ஆனால் புரவலர்கள் தேர்வு செய்வதற்கு இது உங்கள் பக்கத்தில் காட்டப்படாது.