உங்கள் அட்டை அல்லது PayPal தகவல்களை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து இந்தக் கட்டுரை உங்களுக்கு வழிகாட்டும். ஒரு கட்டண முறை மறுக்கப்பட்டால், வேறொரு அட்டையைப் பயன்படுத்த அல்லது PayPal கணக்கைச் சேர்க்குமாறு பரிந்துரைக்கிறோம்.
நீங்கள் டெஸ்க்டாப்பில் அல்லது கைப்பேசி இணையத்தில் (அதாவது Chrome அல்லது Firefox) உள்நுழைந்திருக்கும்போது மட்டுமே கட்டண முறையைச் சேர்க்க அல்லது புதுப்பிக்க முடியும். நீங்கள் செயலியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தயவுசெய்து ஒரு கைப்பேசி உலாவியில் உள்நுழைந்து கீழே உள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்!
ஒரு புதிய கட்டண முறையைச் சேர்த்தல்
புதிய கடன் அட்டையை எவ்வாறு சேர்ப்பது
- பயனர் menu ஐத் திறக்க உங்கள் சுயவிவரப் படத்தின் மீது வட்டமிடவும்.
- Menu இலிருந்து உறுப்பினருரிமைகளை நிர்வகிக்கவும் என்பதைச் சொடுக்கவும்.
- Menu பட்டையில் இருந்து கட்டண முறைகள் என்பதைச் சொடுக்கவும்.
- அட்டையை சேர்க்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
- உங்கள் அட்டை விவரங்களை உள்ளிட்டு, சமர்ப்பிக்கவும் என்பதைச் சொடுக்கவும்.
- உங்களின் முன்னாள் கட்டண முறையில் உறுப்பினருரிமைகளை இடமாற்றவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும். Drop-down இலிருந்து புதிதாகச் சேர்க்கப்பட்ட அட்டையைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் ஏற்கனவே உள்ள ஏதேனும் உறுப்பினருரிமை(களை) உங்கள் புதிய கட்டண முறைக்கு நகர்த்த இடமாற்றவும் என்ற பொத்தானைச் செடுக்கவும்.
உங்கள் அட்டை அங்கீகாரம் மறுக்கப்பட்டால், மறுமுயற்சி செய்வதற்கு முன்னர், உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு, எதிர்காலத்தில் "Patreon * Membership" -இல் இருந்து வரும் அங்கீகாரங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுங்கள்.
நீங்கள் "அட்டை ஏற்கனவே இந்த கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது" என்ற செய்தியைப் பெற்றால், சாளரத்திலிருந்து வெளியேறி, உங்கள் காலாவதியான அட்டைக்கு அடுத்துள்ள மீண்டும் முயற்சிக்கவும் அல்லது புதுப்பிக்கவும் என்பதைச் சொடுக்கவும்
புதிய PayPal கணக்கை எவ்வாறு சேர்ப்பது
- பயனர் menu ஐத் திறக்க உங்கள் சுயவிவரப் படத்தின் மீது வட்டமிடவும்.
- Menu இலிருந்து உறுப்பினருரிமைகளை நிர்வகிக்கவும் என்பதைச் சொடுக்கவும்.
- மேல் menu பட்டையில் இருந்து கட்டண முறைகள் என்பதைச் சொடுக்கவும்.
- PayPal -ஐச் சேர்க்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
- pop-up window இல் உங்களின் PayPal கணக்கில் உள்நுழையுங்கள் அல்லது உங்களிடம் PayPal கணக்கு இல்லையென்றால் ஒன்றை உருவாக்குங்கள்.
- உங்களின் முந்தைய கட்டண முறையில் உறுப்பினருரிமைகள் மாற்றுதல் என்ற பொத்தானை சொடுக்குங்கள். pop-up window drop-down இல் இருந்து உங்கள் PayPal கணக்கைத் தேர்ந்தெடுங்கள். அதன் பின் ஏற்கனவே உள்ள உறுப்பினருரிமைகளை உங்கள் புதிய கட்டண முறைக்கு நகர்த்த மாற்றுதல் பொத்தானைச் சொடுக்குங்கள்.
ஏற்கனவே உள்ள கட்டணமுறையைப் புதுப்பித்தல்
இணைக்கப்பட்ட PayPal கணக்கை எவ்வாறு புதுப்பிப்பது
உங்கள் PayPal கணக்கில் தொடர்புடைய கட்டண முறையை நீங்கள் புதுப்பிக்க அல்லது மாற்ற வேண்டுமானால் PayPal இல் நேரடியாக உங்கள் PayPal வாலட் ஆதாரத்தைப் புதுப்பிக்க முடியும், அல்லது உங்கள் PayPal கணைக்கை புதுக் கணக்காக மீண்டும் சேர்ப்பதன் மூலம் Patreon இல் இருந்து PayPal வாலட் தகவல்களில் மாற்றம் செய்யமுடியும்.
நடைமுறையில் உள்ள கடன் அட்டையை எவ்வாறு புதுப்பிப்பது
- பயனர் menu ஐத் திறக்க உங்கள் சுயவிவரப் படத்தின் மீது நகர்த்துங்கள்.
- drop-down menu இல் இருந்து உறுப்பினருரிமைகளை நிர்வகித்தல் என்பதைச் சொடுக்குங்கள்.
- மேலிருக்கும் menu bar இல் இருந்து கட்டண முறை என்பதைச் சொடுக்குங்கள்.
- நீங்கள் புதுப்பிக்க வேண்டிய கடன் அட்டைக்கு அடுத்துள்ள புதுப்பிப்பு என்ற பொத்தானைச் சொடுக்குங்கள்.
- புதுப்பிக்கப்பட்ட காலாவதி தேதி, CVV அல்லது கட்டண zip குறியீடுகளுடன் உங்கள் கடன் அட்டை விவரங்களை மீண்டும் உள்ளிடவும்.
- உறுதிப்படுத்த சமர்ப்பிக்க என்பதைச் சொடுக்கவும்.
கட்டண முறையை நீக்குதல்
கட்டண முறையை நீக்குவதற்கு முன், செயலில் உள்ள உறுப்பினருரிமைகளில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை எங்கள் அமைப்பிற்கு தெரியப்படுத்த வேண்டும். உங்கள் உறுப்பினருரிமைகளைப் புதிய அல்லது ஏற்கனவே உள்ள கட்டண முறைக்கு மாற்றலாம் அல்லது செயலில் உள்ள உறுப்பினருரிமைகள் பக்கத்தில் இருந்து உங்கள் உறுப்பினருரிமையை ரத்து செய்யலாம்.
கட்டண முறையை எவ்வாறு நீக்குவது
- பயனர் menu ஐத் திறக்க உங்கள் சுயவிவரப் படத்தின் மீது நகர்த்துங்கள்.
- drop-down menu இல் இருந்து உறுப்பினருரிமைகளை நிர்வகித்தல் என்ற இணைப்பைச் சொடுக்கவும்.
- மேலிருக்கும் menu bar இல் இருந்து கட்டண முறை என்பதைச் சொடுக்குங்கள்.
- உறுப்பினருரிமைகளைப் புதிய கட்டண முறைக்கு மாற்ற உறுப்பினருரிமைகள் மாற்றுதல் என்பதை சொடுக்கலாம் அல்லது தொடர்வதற்கு முன் உங்கள் உறுப்பினருரிமைகளை ரத்து செய்ய இந்த வழிகாட்டுதலை பின்பற்றவும்..
- கட்டணமுறையில் இருந்து உறுப்பினருரிமைகளைை அகற்றிய பின், நீங்கள் நீக்க விரும்பும் கட்டண முறைக்கு அடுத்து உள்ள அகற்று என்ற பொத்தானை அழுத்துங்கள்.
முக்கியம்: உறுப்பினருரிமைகளுடன் இணைக்கப்பட்ட கட்டண முறையை நீக்குவது அந்த உறுப்பினருரிமைகளை உடனடியாக ரத்து செய்யும். இப்படி நடக்கும் பட்சத்தில், உங்களின் கட்டண வரலாறுக்கு சென்று அங்கிருந்து படைப்பாளரின் பக்கத்த்தில் மீண்டும் இணைவதன் மூலம் உங்கள் உறுப்பினருரிமைகளை மீண்டும் செயல்படுத்தலாம். உறுப்பினருரிமைகளுடன் இணைக்கப்பட்ட கட்டண முறையை நீக்குவது இருப்பில் உள்ள கொடுப்பனவுகளை நீக்காது அல்லது உறுப்பினராக செயலில் இருந்த போது செய்யப்பட்ட கட்டணங்களை ரத்து செய்ய்தாது.