Discord என்றால் என்ன?
Discord என்பது குரல் மற்றும் செய்தி உரையாடல் என அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டுள்ள தளமாகும். படைப்பாளர்கள் அவர்களின் புரவலர் சமுதாயத்துடன் இணைய உதவுவதற்கு இதனைப் பயன்படுத்தலாம். Discord பற்றி அவர்களின் இணையதளத்தில் மேலும் அறியவும்.
இந்த வழிகாட்டியில், நாம் இதைப் பற்றி காண்போம்:
- நான் ஒரு புரவலராகும்போது எனது Discord role ஐ எவ்வாறு பெறுவேன்?
- நான் ஏற்கனவே ஆதரிக்கும் ஒரு படைப்பாளர் Discord ஐச் சேர்க்கும்போது எனது Discord role ஐ நான் எவ்வாறு பெறுவேன்?
- சரிசெய்தல், நீங்கள் உங்கள் Discord role க்கு அணுகலைப் பெற்றிருக்கவில்லை என்றால்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நான் ஒரு புரவலராகும்போது எனது Discord role ஐ எவ்வாறு பெறுவேன்?
மகிழ்ச்சி, Discord சேவையகத்திற்கான அணுகலை வழங்கும் ஒரு படைப்பாளரின் புரவலராக நீங்கள் மாறிவிட்டீர்கள், இதில் நீங்கள் அவர்களின் சமூகத்துடன் ஊடாடலாம். நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் Discord கணக்கை உங்கள் Patreon கணக்கில் இணைப்பதுதான்.
உங்கள் Patreon கணக்கில் Discord ஐ இணைப்பதற்கு கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:
படி 1: நீங்கள் சரியான அடுக்கில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு அடுக்கில் சேருவதற்குப் பதிலாக “தனிப்பயன் உறுதிமொழி” எடுத்திருந்தால், உங்களுக்கு எந்தவிதமான Discord பொறுப்புகளும் ஒதுக்கப்படாது.
படி 2: உங்கள் கொடுப்பனவு தொகை மற்றும் அடுக்குத் தேர்வை நீங்கள் உறுதிசெய்த பிறகு, உங்கள் படைப்பாளரின் வரவேற்பு குறிப்புக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் Discord உடன் இணைக்கவும் பொத்தானைச் சொடுக்குவதன் மூலம் தொடங்கவும்.
படி 3: உங்களது சுயவிவர அமைப்புகள் பக்கத்தில் உள்ள செயலி பிரிவுக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள் - Discord செயலியின் வலதுபுறம் உள்ள இணைக்கவும் பொத்தானைச் சொடுக்கவும். தோன்றும் pop-up சாளரத்தில் உங்கள் Discord கணக்கில் உள்நுழையவும்.

நீங்கள் இன்னும் Discord கணக்கைக் கொண்டிருக்கவில்லையா?
தோன்றும் pop-up சாளரத்தில் பதிவு செய்வதற்கான விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுத்து, நினைவூட்டல்களைப் பின்பற்றவும்.
படி 4: இப்போது உங்கள் Patreon மற்றும் Discord கணக்குகள் தொடர்புகொள்வதால், எங்கள் ஒருங்கிணைவு உங்கள் அடுக்குடன் இணைந்திருக்கும் பொறுப்பை உங்களுக்கு ஒதுக்கும்!
Discord கணக்கில் உள்நுழைவதன் மூலம் நீங்கள் உங்களின் புதிய role ஐ அணுகலாம்.
நாங்கள் உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து உங்கள் Discord பொறுப்பை அணுகுகிறீர்களா?
அந்த மின்னஞ்சலில் உள்ள Discord உடன் இணைக்கவும் பொத்தானைச் சொடுக்கி, படி 2 இல் தொடங்கி, மேலே உள்ள படிகளைப் பார்க்கவும்.
எனது படைப்பாளர் இப்போது Discord ஐ ஒரு பலனாகச் சேர்த்துள்ளார் - நான் எப்படி எனது Discord role ஐப் பெறுவேன்?
உங்கள் படைப்பாளர் ஒரு புதிய நன்மையாக Discord பொறுப்புகளை அறிமுகப்படுத்துகிறார் என்றால், கவலை வேண்டாம், ஏற்கனவே இருக்கும் புரவலராக, புதிய பலன் உங்களுக்கு வழங்கப்படும்.
உங்கள் அடுக்கில் உள்ள புரவலர்களுக்கான புதிய நன்மையாக Discord ஐ அவர்கள் சேர்த்துள்ளதாக ஒரு படைப்பாளர் அறிவிக்கும்போது, உங்கள் பொறுப்பை அணுக கீழேயுள்ள படிகளைப் பின்பற்றவும்:
படி 1: உங்கள் Patreon கணக்கில் உள்நுழைந்து, உங்கள் சுயவிவர அமைப்புகளின் செயலிகள் தாவல் பக்கத்திற்குச் செல்லுங்கள்.
படி 2: Discord செயலிக்கு அடுத்துள்ள இணைக்கவும் பொத்தானைச் சொடுக்கவும்.

படி 3: இப்போது உங்கள் Patreon மற்றும் Discord கணக்குகள் தொடர்புகொள்வதால், எங்கள் ஒருங்கிணைவு உங்கள் அடுக்குடன் இணைந்திருக்கும் பொறுப்பை உங்களுக்கு ஒதுக்கும்!
Discord கணக்கில் உள்நுழைவதன் மூலம் நீங்கள் உங்களின் புதிய role ஐ அணுகலாம்.
குறிப்பு: வேறொரு உறுப்பினருரிமைக்காக Discord ஐ உங்கள் Patreon கணக்குடன் இணைத்துள்ளீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை! அடுத்ததாக நீங்கள் Discord இல் உள்நுழையும்போது இப்போது Discord ஐ நிரப்பும் படைப்பாளருக்கான சேவையகத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
எனது பொறுப்பை அணுகுவதற்கான அணுகலைப் பெறுவதற்கு எனக்குக் கூடுதல் உதவி தேவை
சில மணிநேரங்களாகிவிட்டது, ஆனாலும் நீங்கள் இன்னும் ஒரு படைப்பாளரின் Discord சேவையகத்திற்கான அணுகலைப் பெறவில்லையென்றால், மேலும் அனைத்தையும் செயல்பட வைக்க நீங்கள் முயற்சிப்பதற்கு சில சரிசெய்தல் படிகள் உள்ளன.
படி 1: உங்கள் Discord மற்றும் Patreon கணக்கைத் துண்டிக்கவும். இதை நீங்கள் உங்களின் Patreon சுயவிவர அமைப்புகள் பக்கத்திலிருந்து செய்யலாம், இதில் துண்டிக்கவும் என்னும் பொத்தானைச் சொடுக்கி உங்கள் Discord மற்றும் Patreon கணக்கைத் துண்டிப்பதற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள்.

படி 2: Discord இலிருந்து வெளியேறவும். Discord இலிருந்து வெளியேற உதவுவதற்கு, Discord இன் கட்டுரையான எப்படி வெளியேறுவது என்பதைக் காணவும்.
படி 3: உங்கள் சுயவிவர அமைப்புகள் பக்கத்திற்குத் திரும்பிச் சென்று, Discord க்கு அருகிலுள்ள இணைக்கவும் பொத்தானைச் சொடுக்கவும்.
படி 4: உங்கள் Discord கணக்கில் மீண்டும் உள்நுழையவும் - இப்போது உங்களின் சரியான role ஐ நீங்கள் கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் அடுக்குடன் இணைக்கப்பட்ட Discord பொறுப்பிற்கான அணுகலை நீங்கள் இன்னும் பெற்றிருக்கவில்லை என்றால்:
நீங்கள் இந்தப் படிகளைப் பின்பற்றியிருந்தாலும், இன்னும் அணுகல் கிடைக்கவில்லை என்றால், படைப்பாளர் அவர்களின் Discord Bot ஐ எவ்வாறு அமைத்துள்ளார் என்பதில் சிக்கல் இருக்கலாம்.
படைப்பாளரைத் தொடர்புகொள்ள நாங்கள் பரிந்துரைக்கிறோம், இதன் மூலம் அவர்களின் Patreon Bot அவர்களின் Discord சேவையகத்தில் உள்ள பொறுப்புகளைவிட மேலானது என்பதை உறுதி செய்யலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கே: நான் எனது Discord கணக்கை Patreon உடன் இணைத்துள்ளேன், ஆனால் Discordக்குள் உள்நுழைந்தால் எனது படைப்பாளரின் சேவையகத்தை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
ப: உங்கள் Patreon கணக்கை உங்கள் சுயவிவர அமைப்புகள் பக்கத்துடன் நீங்கள் இணைத்திருந்தால், இந்தப் பக்கத்திலிருந்து Discord ஐத் துண்டித்து மீண்டும் இணைக்க நாங்கள் பரிந்துரைக்கிறோம். துண்டிப்பதற்கு முன், உங்கள் சாதனத்தில் Discord இலிருந்து முழுமையாக வெளியேறவும். மீண்டும் இணைப்பது இரண்டு செயலிகளுக்கும் இடையிலான தகவல்தொடர்பை மீண்டும் நிறுவும்.
உங்கள் படைப்பாளரின் சேவையகத்தை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனில், உங்கள் படைப்பாளருக்கான சரியான அடுக்கில் இருக்கிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். நீங்கள் தனிப்பயன் உறுதிமொழி விருப்பத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய புரவலராகிவிட்டால், ஒரு குறிப்பிட்ட அடுக்கைத் தேர்ந்தெடுக்கலாமே தவிர, நீங்கள் எவ்வளவு தொகையைச் செலுத்தினாலும், உங்களுக்கு ஒரு Discord பொறுப்பு ஒதுக்கப்படாது.
இடுகைகளைத் திறப்பதற்கான எங்கள் உதவி மைய வழிகாட்டியின் இந்தப் பகுதி, நீங்கள் எந்த அடுக்கில் இருக்கிறீர்கள் என்பதைச் சரிபார்க்க உங்களுக்கு உதவும்:
கே: எனது படைப்பாளர் எனது அடுக்கிற்கான பலனாக Discord ஐ வழங்குகிறார் என்று எனக்கு எப்படித் தெரியும்?
ப: அவர்களின் அடுக்குகளைச் சரிபார்த்து, உரையைத் தொடர்ந்து Discord இலச்சினை வருகிறதா என்று பார்க்கவும்: இதில் அவர்களின் அடுக்கு விவரத்தின் கீழிருக்கும் Discord வெகுமதிகளும் அடங்கியிருக்கும் .

கே: எனக்குச் சரியான role உள்ளதாக எனக்குத் தோன்றவில்லை? எனது அடுக்கில் என்ன role வருகிறது என்று எனக்கு நினைவில்லை?
ப: உங்கள் படைப்பாளர் Discord ஐ வழங்குகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்தால், ஆனால் அவர்களின் Discord சேவையகத்தில் உங்களுக்குத் தவறான role ஒதுக்கப்படலாம் என்று நீங்கள் நினைத்தால், இரண்டு முறை சரிபார்க்க நீங்கள் செய்யக்கூடிய இரண்டு விஷயங்கள் உள்ளன:
- உங்கள் உறுப்பினருரிமைகளை நிர்வகிக்கவும் பக்கத்தில் உள்ள செயலில் உள்ள உறுப்பினருரிமைகள் தாவலிற்குச் செல்லவும். உங்கள் படைப்பாளர் அடுக்கு விவரத்திற்கான Discord பொறுப்பு பெயரைச் சேர்த்துள்ளாரா என்று சரிபார்க்க உறுப்பினருரிமை கட்டத்திற்கு கீழே உள்ள மேலும் என்னும் பொத்தானைச் சொடுக்கவும்.
- உங்கள் Discord role ஐ உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், உங்கள் படைப்பாளருக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள் - உங்களுக்கு எந்தப் பொறுப்பு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். உங்கள் படைப்பாளருக்கு எப்படிச் செய்தி அனுப்புவது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
கே: எனது படைப்பாளரின் சேவையகத்திற்கான அணுகல் என்னிடம் இல்லை,, நான் என்ன செய்ய வேண்டும்?
ப: உங்கள் சுயவிவர அமைப்புகள் பக்கத்தின் செயலிகள் தாவலிலிருந்து உங்கள் Discord கணக்கைத் துண்டித்துவிட்டு மீண்டும் இணைக்கவும்.