ஒரு குறிப்பிட்ட படைப்பாளரின் புரவலராக எண்ணி அவரை நீங்கள் தேடினால், அவர் படைப்பாளர் பக்கத்தைக் கண்டுபிடிக்க சில வழிகள் உள்ளன. இந்தக் கட்டுரையில், Patreon இல் குறிப்பிட்ட படைப்பாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழிகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்.
குறிப்பு: புதியவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதை விட, குறிப்பிட்ட படைப்பாளர்களைத் தளத்தில் கண்டறிய இந்த கட்டுரை உங்களுக்கு உதவும்.
இந்தக் கட்டுரையில், படைப்பாளர்களை நாம் இந்த வழிகளில் கண்டுபிடிப்போம்:
Search bar ஐப் பயன்படுத்தல்
Search bar உங்கள் கணக்கின் வலது மேல் மூலையில் அமைந்துள்ளது. Search bar ஐ விரிவாக்க பூதக் கண்ணாடி ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இங்கிருந்து, உங்கள் படைப்பாளரின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்குங்கள்.
படைப்பாளர் பக்கத்தின் பெயர் அல்லது URL உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே நீங்கள் படைப்பாளர்களை தேடுக பெட்டியில் கண்டுபிடிக்க முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் படைப்பாளர் ஃப்ரான் மெனிஸிஸைத் தேடுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். அவருடைய படைப்பாளப் பெயரான “Fran Meneses”ஐ நீங்கள் தேடும்போது அவருடைய பக்கம் பற்றிய விபரங்களைப் பெறலாம். அவருடைய படைப்பாளர் பக்கத்தின் பெயரான “Frannerd”ஐ URLல் தட்டச்சு செய்வதன் மூலமும் அவரைக் காணலாம்.
குறிப்பு: வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை உருவாக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் படைப்பாளர்களைப் Patreon இல் தேடல் முடிவுகளில் காண இயலாது. வயது வரம்புகள்தான் இதற்கு காரணம். இத்தகைய சூழ்நிலையில், Patreon தவிர Google அல்லது வேறு தேடுபொறியைப் பயன்படுத்துவது அவர்களின் படைப்பாளர் பக்கத்தைக் கண்டறிய உதவும். படைப்பாளர் ஒருவரின் பக்கத்தை, உங்களுக்குப் பிடித்த தேடுபொறியில் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு கீழே காணவும்.
பிற தேடுபொறிகளைப் பயன்படுத்துதல்
Patreon இல் படைப்பாளர்களைக் கண்டுபிடிக்க நீங்கள் Google அல்லது உங்களுக்கு விருப்பமான தேடுபொறியைப் பயன்படுத்தலாம். “படைப்பாளரின் பெயர்” மற்றும் “Patreon” ஆகியவற்றைத் தேடுவது தான் இதைச் செய்வதற்கான சிறந்த வழி. எடுத்துக்காட்டாக, நீங்கள் ”Fran Meneses Patreon” என Google இல் தேடினால், அவருடைய Patreon பக்கம் முதன்மையாகக் காண்பிக்கப்படும்.
படைப்பாளரின் சமூக ஊடக தளங்களை சரிபார்த்தல்
நீங்கள் விரும்பும் படைப்பாளரைக் கண்டுபிடிப்பதில் இன்னும் சிக்கல் இருந்தால், படைப்பாளர் தன் Patreon பக்கத்தை தன் பிற சமூக ஊடக தளங்களில் விளம்பரப்படுத்தியிருக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. உங்களுக்குப் பிடித்த வலையொலியின் Patreon பக்கத்தைத் தேடுகிறீர்களா? வலையொலியாளர்கள் பெரும்பாலும் தங்கள் Patreon பக்க URL ஐ அத்தியாயங்களில் அல்லது காட்சிக் குறிப்புகளில் குறிப்பிடுகிறார்கள். Patron பக்கங்களைக் கொண்ட YouTube பயன்பாட்டாளர்கள் தங்கள் YouTube சேனல்களில், பற்றிய எனப்படும் பிரிவில், அல்லது காணொளிகளின் முடிவில் தங்கள் பக்கத்திற்கான இணைப்பை உள்ளடக்குவார்கள்.
எனவே, தங்கள் Patreon பக்கங்களை பிற சமூக ஊடக சேனல்களில் விளம்பரப்படுத்தும் உங்களுக்குப் பிடித்த படைப்பாளர்களைத் தேடுவதை உறுதிப்படுத்துங்கள்.